
posted 13th March 2022
ஈ. பி. டி. பி. நடத்தவுள்ள போராட்டம்
யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தை நாளை திங்கட்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்துவதற்கு ஈழ மக்கள் ஜனநாயக்க கட்சியின் (ஈ. பி. டி. பி.) கட்சி அழைப்பு விடுத்துள்ளது.
அந்தக் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் சிவகுரு பாலகிருஷ்ணன் இதற்கான அழைப்பை விடுத்துள்ளார். இது தொடர்பில் அவர் விடுத்த அறிக்கையில்,
“மக்கள் நலன்கருதிய பிரதேச அபிவிருத்திகளை முன்னெடுக்கும் செயல்பாடுகளை யாழ். மாவட்ட செயலகம் கட்டுப்படுத்தி தன்னிச்சையான நடைமுறைகளை திணிக்க முயல்கிறது.
பிரதேச சபையை மையப்படுத்திய அபிவிருத்தி திட்டங்களில் மக்கள் பிரதிநிதிகள் முழுமையாக புறக்கணிக்கப்படும் நிலை யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மட்டும் காணப்படுகின்றது. மக்களின் நலன்கள் அவர்களின் விருப்புக்கு அமைவாக இருக்க வேண்டும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கூறியுள்ளார். ஆனால், யாழ்ப்பாண மாவட்டத்தில் செயலகம் சொல்வது ஒன்று செய்வது வேறொன்றாக உள்ளது.
இவை தொடர்பில் நாம் பிரதேச செயலகங்களில் சுட்டிக்காட்டும்போது அந்த அதிகாரிகள் இந்த உத்தரவுகளை மாவட்ட செயலகமே வழங்குவதாக குறிப்பிடுகின்றனர். அந்தவகையில் மாவட்ட செலகத்தின் தன்னிச்சையான முடிவுகளால் மக்கள் பல அவலங்களை எதிர்கொண்டு வருவதை நாம் நாளாந்தம் காணமுடிகின்றது.
எனவே, தன்னிச்சையான நடைமுறைகளை யாழ். மாவட்ட செயலகம் முன்னெடுத்து வருவதை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது என்றுள்ளது.
உள்ளூரில் தயாரிக்கப்பட்ட கைத்துப்பாக்கி வைத்திருந்தவர் கைவசமாக மாட்டினார்
மாங்குளம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வன்னிவிளாங்குளத்தில் உள்ளூரில் தயாரிக்கப்பட்ட சட்டவிரோத துப்பாக்கியைத் தம்வசம் வைத்திருந்த ஒருவரை, நேற்று சனிக்கிழமை இரவு பொலிஸார் கைதுசெய்தனர்.
மாங்குளம் பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்தே, 32 வயதுடைய நபர் கைதுசெய்யப்பட்டார்.
சந்தேகநபரை, நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கையில் மாங்குளம் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.
மீன்பிடி சம்பந்தமான முதலீடுகளை யாழ்ப்பாணத்தில்விரும்பும் இந்தியா …..?
“இந்தியாவிலிருந்து யாழ்ப்பாணத்தில் மீன்பிடி சம்பந்தமான முதலீடுகளை செய்து, அதன் மூலம் வடக்கு மீனவர்களுக்கு வருமானத்தை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றோம். இதற்கு அனைவரும் இதற்கு ஒத்துழைக்க வேண்டும்.”, என்று யாழ்ப்பாணம் வந்துள்ள இந்தியத் தூதுவர் கோபால் போக்லே தெரிவித்துள்ளார்.
அத்துடன், இந்தியா உங்களுடைய சகோதர நாடு. உங்களுக்காக என்றும் அக்கறையுடன் செயல்படும். வடக்கு மீனவர்களின் பிரச்னைகளைத் தீர்ப்பதற்காக அரச தரப்புடனும் மீனவர் பிரதிநிதிகளுடனும் பேச்சுக்களை நடத்துவதற்கு நாங்கள் தீர்மானித்துள்ளோம். எதிர்காலத்தில் மீனவர்களுக்கான உதவித் திட்டங்களை வழங்குதலை விரிவுபடுத்தவும் திட்டமிட்டுள்ளோம் என்றும் அவர் கூறினார்.
யாழ்ப்பாண மாவட்டத்தில் இந்திய மீனவர்களின் அத்துமீறல்களால் பாதிக்கப்பட்ட 600 குடும்பங்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் பெறுமதியான உலர் உணவுப் பொருட்களை யாழ். மாவட்ட செயலகத்தில் வைத்து வழங்கியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இதன்போது அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு,
இம்முறை கச்சதீவு அந்தோனியார் ஆலயத் திருவிழாவை சிறப்பாக நடத்தியமைக்காக கடற்றொழில் அமைச்சர், யாழ். மாவட்ட செயலர் மற்றும் அதிகாரிகளுக்கு நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
கொரோனா பாதிப்பு இலங்கை, இந்தியாவை மட்டும் பாதிக்கவில்லை. உலக நாடுகள் அனைத்தையும் பாதித்துள்ளது. பல்வேறு நாடுகளில் கொரோனா நோய் தாக்கத்தை ஏற்படுத்தி பல்வேறு பொருளாதார ரீதியான தாக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இலங்கையும் இந்தியாவும் ஒருவருக்கு ஒருவர் உதவி இந்த கொரோனாவிலிருந்து முன்னேறுவதற்கு செயல்பட்டதன் மூலம் நமது இலங்கை - இந்தியா உறவானது இதன்மூலம் பன்மடங்கு அதிகரித்துள்ளது.
முதல் கட்டமாக யாழ்ப்பாண மீனவர்களுக்கான உதவித் திட்டத்தை வழங்கியுள்ளோம். மீனவர் சங்கப் பிரதிநிதிகள் கொடுக்கப்பட்ட கோரிக்கைகள் துணைத் தூதரகம் என்ற அடிப்படையிலும், இந்திய நாடு என்ற அடிப்படையிலும் அதற்குரிய தீர்வைப் பெற்றுக்கொடுப்பதற்கு நாங்கள் முயற்சிக்கிறோம். எதிர்காலத்தில் இந்திய அரசின் உதவித் திட்டங்கள் பன்மடங்கு அதிகரித்து பல்வேறு உதவிகளை வழங்குவோம். அத்துடன், உதவித் திட்டத்தை விரிவுபடுத்தத் தீர்மானித்துள்ளோம்.
இந்தியாவிலிருந்து யாழ்ப்பாணத்தில் மீன்பிடி சம்பந்தமான முதலீடுகளை செய்து, அதன் மூலம் இங்குள்ளவர்களுக்கு வருமானத்தை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றோம். அனைவரும் இதற்கு ஒத்துழைக்க வேண்டும்.
எமது அரசாங்கத்தால் அமைக்கப்பட்டுள்ள கலாசார மத்திய நிலையம் திறந்து வைக்கப்படவுள்ளது. அத்தோடு கலாச்சார மத்திய நிலையத்தை இரண்டு நாடுகளும் இணைந்து எவ்வாறு நிர்வகிப்பது என்பது தொடர்பில் இலங்கை அரசுடன் பேச்சுவுள்ளோம், என்றார்.

எஸ் தில்லைநாதன்
உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்
For Holiday Bookings, click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House